Friday 8 May 2015

பெங்களூரு ஐ.டி.ஐ., நிறுவன காலியிடங்கள்

தொலைத் தொடர்புத் துறையில் பிரசித்தி பெற்ற ஐ.டி.ஐ., நிறுவனம் பெங்களூருவில் 1948ல் நிறுவப்பட்டது. நமது நாட்டின் டெலிகாம் துறை சார்ந்த 50 சதவிகித வலையமைப்புகளை உருவாக்குவதில் இந்த நிறுவனமே பங்காற்றியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிறுவனத்தில் காலியாக உள்ள கிரேடு 2 பணியிடங்களை நிரப்புவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
என்னென்ன பிரிவுகள்?: ஐ.டி.ஐ.,நிறுவனத்தில் மேதமெடீசியன்ஸ், கம்ப்யூட்டர் சயின்ஸ் இன்ஜினியர்ஸ், எலக்ட்ரானிக்ஸ் அண்டு கம்யூனிகேஷன் இன்ஜினியர்ஸ் என்ற மூன்று பிரிவுகளில் இந்த காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.
வயது: விண்ணப்பதாரர்கள் அதிகபட்சம் 35 வயதுக்கு உட்பட்டவராக இருக்க வேண்டும். எஸ்.சி., எஸ்.டி., பிரிவினருக்கு 5 வருடம் வரை சலுகை உள்ளது.
கல்வித் தகுதி: மேதமெடீசியன்ஸ் பிரிவுக்கு விண்ணப்பிக்க எம்.எஸ்.சி., மேதமெடிக்ஸ் முடித்திருப்பதோடு நம்பர் தியரி/பிரைம் நம்பர் தியரி, கிரிப்டோகிராபி/எலிப்டிகல் கிரிப்டோகிராபி, பைனைட் பீல்டு ஆகிய பாடங்கள் ஏதாவது இரண்டை படித்திருக்க வேண்டும். சி மற்றும் சி++ பிரிவில் அனுபவம் இருந்தால் நல்லது. கம்ப்யூட்டர் சயின்ஸ் இன்ஜினியர்ஸ் பிரிவுக்கு விண்ணப்பிப்பவர்கள் பி.இ., அல்லது பி.டெக்., பட்டப் படிப்பை கம்ப்யூட்டர் சயின்ஸ் பிரிவில் முடித்திருப்பதோடு சி, சி++, விசி++டி ஆகிய கம்ப்யூட்டர்
லாங்வேஜ்களில் திறன் பெற்றிருப்பது நல்லது. எலக்ட்ரானிக்ஸ் அண்டு கம்யூனிகேசன் இன்ஜினியரிங் பிரிவுக்கு விண்ணப்பிப்பவர்கள் பி.இ., அல்லது பி.டெக்., படிப்பை இதே பிரிவில் முடித்திருப்பதோடு சில கம்ப்யூட்டர் தொடர்பான சிறப்புத் தகுதிகளையும் பெற்றிருக்க வேண்டும். முழுமையான தகவல்களுக்கு இணையதளத்தைப் பார்க்கவும்.
விண்ணப்பிக்கும் முறை: விண்ணப்பங்களை சாதாரண அல்லது விரைவுத் தபால் மூலம் மட்டுமே அனுப்ப வேண்டும். 
Chief Manager-Hr (B) 
ITI Limited Bangalore 
Plant Dooravani Nagar 
Bangalore- 560 016
விண்ணப்பங்கள் கிடைக்க இறுதி நாள்: 30.04.2015
இணையதள முகவரி: http://www.itiltd-india.com/upload/careers/RandDEngineersontenureadvertisement_19-04-2015.pdf

1 comment: